×

காஞ்சி மடத்துக்கு தனது வீட்டினை தானமாக வழங்கினார் எஸ்.பி.பி

திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தமிழ், தெலுங்கு,  மலையாளம், இந்தி  உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும்  அதிகமான பாடல்களை பாடி  சாதனை படைத்திருக்கிறார். 1967ம் ஆண்டு பாடகராக அறிமுகமாகி ரஜினியின் தர்பார்  படம் வரை ‘பாடல் பாடி இருக்கிறார். எஸ்.பி.பிக்கு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பூர்வீக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை காஞ்சி மடத்துக்கு தானமாக அளிக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது அதை நிறைவேற்றியிருக்கிறார். காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தனது வீட்டை முறைப்படி ஒப்படைத்தார்.

Tags : house ,Kanchi ,
× RELATED இணையத்தில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே பழங்கள், காய்கறிகள் வரும்