×

சூப்பர் ஸ்டாரை சந்தித்த தளபதி இயக்குனர்

கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது கர்நாடகாவில் சிமோக சிறையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில் இயக்குனர் லோகேஷ் போயஸ் கார்டன் வந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தார்.

கைதி வெற்றிக்கு வாழ்த்து கூறியதுடன் தளபதி 64 பட வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்தார் ரஜினி. சிறிது நேரம் ரஜினியிடம் பேசிவிட்டு லோகேஷ் புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பு பற்றி பல்வேறு யூகங்கள் கூறப்படுகிறது. ரஜினி நடிக்கும் 169வது படத்தை லோகேஷ் இயக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

Tags : Commander director ,superstar ,
× RELATED வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!