×

நயனுக்காக ரஜினியிடம் பர்மிஷன் வாங்கிய காதல் இயக்குனர்

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதல் ஜோடிகளாக வருடக்கணக்கில் வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.  கல்யாணம் எப்போது என்று விக்னேஷ் சிவனும் கேட்கவில்லை, இப்போதுதான் கல்யாணம் என்று நயன்தாராவும் சொல்லவில்லை. குடும்பத்தினர்தான் இவர்களின் திருமணத்துக்கு மல்லு கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் அவ்வப்போது வருகிறது.

அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தொழில் விஷயத்தில் இருவருமே கவனமாக இருக்கின்றனர். நயன்தாரா தொடர்ந்து நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் அடுத்த படம் இயக்குவதற்கு தயாராகிவிட்டார். சொந்தமாக ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தொடங்கியிருக்கும் விக்னேஷ் சிவன், நெற்றிக்கண் என்ற படத்தை எழுதி இயக்குகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

நெற்றிக்கண் டைட்டில் ரஜினி நடித்த படம். கடந்த 1981ம் ஆண்டு திரைக்கு வந்தது. எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். அந்த டைட்டிலைத்தான் தற்போது நயன்தாரா நடிக்கும் படத்துக்கு விக்னேஷ் சிவன் வைத்திருக்கி றார். இப்படத்தின் டைட்டிலுக்கான அனுமதியை  கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்திடம் பெற்ற விக்னேஷ் சிவன் சமீபத்தில் ரஜினியை சந்தித்து அவரிடம் இதுகுறித்து தெரிவித்து ஆசி பெற்றார்.

Tags : Rajini ,Nayan ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே சினிமா இயக்குனர் விபத்தில் பலி