திருக்காட்டுப்பள்ளி: கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூருக்கு அதிகளவில் நீர்வரத்தால் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து மேட்டூருக்கு வரும் உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. நேற்று 1.25 லட்சம் கன அடி திறந்து விடப்பட்டது. இந்நிலையில் ேமட்டூருக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூரில் இன்று காலை 1.75 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூரிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முக்கொம்புக்கு வருகிறது. இந்நிலையில் முக்கொம்பில் இருந்து காவிரியில் அதிகளவில் தண்ணீர் திறந்து விப்படுகிறது. இந்த தண்ணீர் கல்லணையை அடைகிறது. இந்நிலையில் கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் 56,340 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லனை கால்வாயில் தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது. மேலும் கல்லணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கொள்ளிடம், காவிரியில் அதிகளவில் இன்று தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் காவிரி, கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….
The post கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் 56,340 கன அடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.