மீண்டும் படம் இயக்கும் கங்கனா

மணிகர்னிகா என்ற இந்தி படத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாய் கேரக்டரில் நடித்த கங்கனா ரனவத், இந்த படத்தின் 30 சதவீத காட்சிகளை அவரே இயக்கினார். இதையடுத்து அவர் தன் வாழ்க்கை கதையை படமாக்க  திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ரசிகர்கள் கொடுத்த ஆதரவு  காரணமாக, பாலிவுட்டில் மார்க்கெட் வேல்யூ உள்ள ஒரு ஹீரோயினாக வெற்றிபெற்று இருக்கிறேன்.

அடுத்து என் வாழ்க்கை கதையை படமாக்குகிறேன். இதை  நானே  இயக்குகிறேன். பாகுபலி, மணிகர்னிகா படங்களுக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார். இப்படத்தில் என் வாழ்க்கையில் நடந்த முக்கிய  சம்பவங்கள் மற்றும் என்னுடன் நெருங்கிப் பழகியவர்கள் குறித்து சொல்கிறேன். ஆனால், தனிப்பட்ட முறையில் எதையும் விமர்சனம் செய்தோ அல்லது யாரையும் தாக்கியோ படமாக்க மாட்டேன்’ என்றார்.

× RELATED ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட...