ஏழுமலையில் ஏழின் பெருமை

ஏழின் மகத்துவம் நிறைந்த ஏழு மலைக்கு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ஏழு தடவை விஜயம் செய்து ஏழுமலை யானுக்குக் கைங்கர்யங்கள் பலவற்றை அளித்தார்.

*10.2.1513ல் முதல் விஜயம், அப்போது வைரம் பதித்த ரத்னகிரீடம், தங்கச் சங்கிலி, காதணிகள் அத்துடன் இருபத்தி ஐந்து வெள்ளித் தாம்பாளங்களை அளித்தார்.

*3.5.1513ல் இரண்டாவது விஜயம். அந்தச் சமயம் வைரக்கிரீடங்களை அளித்தார்.

*மூன்றாவது விஜயத்தின் போது, பதக்கத்துடன் கூடிய தங்க கழுத்து அணிகளையும், தினமும் அமுது படைக்க இரண்டு கிராமங்களையும் தானமாகக் கொடுத்தார்.

*நான்காவது விஜயம், தை மாதம் ஒன்றில் இருந்தபடியால் தை மாத உற்சவத்தை நடத்த ஏற்பாடு செய்தார்.

*25.10.1515ல் அவரது ஐந்தாவது விஜயம் நடைபெற்றது. அப்போது ஐந்து கிராமங்களை தானம் கொடுத்து, விலை மதிக்க முடியாத நவரத்ன பிரபாவளி, மகுட தோரணம் போன்ற திருவாபரணங்

களையும் சமர்ப்பித்தார்.

*2.1.1517ல் ஆறாவது விஜயம் நிகழ்ந்தது. அப்போது கலிங்கப்படையெடுப்பு இருந்தது. இத்தருணத்தில் ஏழுமலையானின் கிருபை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்த ராயர் முப்பது வராகன் தங்க நாணயங்களையும் கொடுத்து, வைர அட்டிகையையும் அளித்து, விமானத்திற்குப் பொன்னும் கொடுத்து மகிழ்ந்தார்.

*17.2.1521ல் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரது ஏழாவது விஜயம் இறுதியாகவே அமைந்தது. அப்போது ஒன்பது வைரங்கள் பதிக்கப் பட்டுப் பீதாம்பரத்தையும் முத்துக்கள் பதித்த, வைரம், தலையணி மற்றும் சாமரத்தையும் காணிக்கையாகவே அளித்தார்.இப்படியாக ஏழின் மகத்துவம் நிறைந்த ஏழுமலை, எல்லோரது நினைவிலும் மனத்திலும் என்றும் அகலாமல் நிற்கிறது.

தொகுப்பு: மகேஸ்வரி

Related Stories: