பலன் தரும் ஸ்லோகம் (குடந்தையின் பெருமை...)

“அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்ய க்ஷேத்ரே வினச்யதி

புண்யய க்ஷேத்ரே க்ருதம் பாபம் வாராணஸ்யாம் வினச்யதி

வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே வினச்யதி

கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே வினச்யதி”

    

இந்தப் புராண ஸ்லோகத்தின் பொருள் - சாதாரண ஊர்களில் பாபம் செய்தால், அதைப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று போக்கிக் கொள்ளலாம். புண்ணித் தலங்களில் பாபம் செய்தால், காசிக்குச் சென்று அதைப் போக்கிக் கொள்ளலாம். காசியிலேயே பாபம் செய்தால், அதைக் கும்பகோணத்தில் போக்கிக் கொள்ளலாம். கும்பகோணத்தில் பாபம் செய்தால், இன்னொரு தலத்தை நாடிப் போகத் தேவையில்லை. கும்பகோணத்தில் செய்த பாபங்களைக் கும்பகோணத்திலேயே போக்கிக் கொள்ளலாம். கும்பகோணத்தை மிஞ்சிய புண்ணியத் தலம் ஏதும் இல்லை. நீராடப் போதுவீர்! போதுமின்!

(இந்த ஸ்லோகத்தை மாசிமகத்தன்று (பிப்ரவரி, 26) பதினோரு முறை சொல்லுங்கள்)

Related Stories: