சனிப்பெயர்ச்சியால் யாருக்கு ஏழரை சனி முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2020 டிசம்பர் 26ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்க உள்ளதாக ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

சனி பகவான் மகர ராசிக்கு செல்வதால் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு ஏழரை சனி நடக்கும்.

சனி பகவானின் பார்வை 3, 7, 10ஆம் இடங்களில் விழுகிறது. சனி பகவான் 3ஆம் பார்வையாக மீன ராசியையும், 7ஆம் பார்வையாக கடக ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையால் பார்த்து பலன் தர உள்ளார்.

இதன் மூலம் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்கு மிகச்சிறந்த படிப்பினை கொடுக்க உள்ளார். இதன் காரணமாக இந்த ராசிகள் எந்த வித பாதிப்புகளைப் பெற உள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

கண்ட சனி - கடக ராசி

அர்த்தாஷ்டம சனி : துலாம்

அஷ்டமத்து சனி : மிதுனம்

விரய சனி : கும்பம்

ஜென்ம சனி: மகர ராசி

பாத சனி, வாக்கு சனி : தனுசு ராசி

விருச்சிக ராசி

இந்த சனிப் பெயர்ச்சி மூலம் விருச்சிக ராசிக்கு ஏழரை சனி முடிவதால், வாழ்விலும், தொழிலும் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு ராசி

தனுசு ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி மூலம் ஜென்ம சனி விலகி பத சனி எனும் கடைசி 2 1/2 ஆண்டுகள் தொடங்குகிறது. தற்போது சனி தனாதிபதி ஸ்தானததில் அமரப் போகின்றார். தடைகள், சோதனைகள் அனுபவைத்த தனுசு ராசியினர் பெருமூச்சு விடும் காலம்.

மகர ராசி

மகர ராசிக்கு அடுத்த இரண்டரை ஆண்டு ஜென்ம சனி காலமாகும். சனி பகவான் தன்னுடைய ராசிக்கு ஆட்சி பெற்று அமரப்போவதால் 30 வயதைக் கடந்தவர்கள் முன்னேற்ற காலத்தை காண போகிறார்கள்.

மீனம், கடகம், துலாம்

சனியின் பார்வை மீனம், கடகம், துலாம் ஆகியவற்றின் மிது விழுகிறது. தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். முன்னேற்றம் கிடைக்கும். சகோதர / சகோதரிகளுக்கு நன்மை செய்வீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெறுவீர்கள். அரசு தொடர்பாக ஆதாயம் கிடைக்கும்.சனி மன அழுத்தத்தைத் தருவார். பயணங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். பணி இடத்தில் நிம்மதியை தந்தாலும், அவ்வப்போது உங்களுக்கான கஷப்பான அனுபவத்தைக் கொடுத்துச் செல்வார். உழைப்பில் சிறந்தவர்களான நீங்கள் இந்த இரண்டரை ஆண்டு ஜென்ம சனியை எளிதாக கடந்து விடுவீர்கள்.

கும்பம்:

சனி பகவான் கும்ப ராசிக்கு 12ஆம் இடத்திற்கு வருவதால், ஏழரை சனி ஆரம்பம் ஆகின்றது. இது உங்களுக்கு விரய சனி. இருப்பினும் இதனால் உங்களுக்கு அதிக பாதிப்பை தர மாட்டார்.

Related Stories: