ஐப்பசி மாத விசேஷங்கள்

ஐப்பசி 1, அக்டோபர் 18, வெள்ளி -  துலா ஸ்நானம் ஆரம்பம், துலா விஷு ஆரம்பம். திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் தீர்த்தம்.  திருநெல்வேலி  ஸ்ரீகாந்திமதியம்மன் காலை கமல வாகனத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் பவனி வரும் காட்சி.

ஐப்பசி 2, அக்டோபர் 19, சனி -  கிருஷ்ணபட்ச சஷ்டி, சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சதர் ஆராதனை. துலாஸ்நான ஆரம்பம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள்  புறப்பாடு கண்டருளல். குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

ஐப்பசி 3,அக்டோபர் 20, ஞாயிறு- கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.

ஐப்பசி 4, அக்டோபர் 21, திங்கள் - பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். கோவில்பட்டி  ஸ்ரீசெண்பகவல்லியம்மன் பவனி.

ஐப்பசி  5 ,அக்டோபர் 22, செவ்வாய் -  சத்தியார். சோளிங்கபுரம் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயார் பக்தோதிசிகப் பெருமாள் திருக்கல்யாண வைபவம். சுவாமிமலை  ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்டதங்கப்பூமாலை சூடியருளல்.

ஐப்பசி 6 ,அக்டோபர் 23, புதன் -   திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் ரதோற்ஸவம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் உற்சவாரம்பம்.

ஐப்பசி 7, அக்டோபர் 24, வியாழன் - கிருஷ்ணபட்ச ஸர்வ ஏகாதசி, சித்திவளாக கொடியேற்றம், காஞ்சி ஸ்ரீ காமாட்சி தபஸ் ஆரம்பம், ஸ்ரீரங்கம் டோலோற்சவ  சாற்றுமறை. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

ஐப்பசி 8, அக்டோபர் 25, வெள்ளி -  கிருஷ்ணபட்ச மஹா பிரதோஷம். தென்காசி, பத்தமடை, வீரவநல்லூர், தூத்துக்குடி, சங்கரநயினார் கோவில், கடையம்  இத்தலங்களில் ஸ்ரீ அம்பாள் திருக்கல்யாண வைபவம்.

ஐப்பசி 9 , அக்டோபர் 26, சனி - மாஸ சிவராத்ரி,  திதித்வயம், (நட்சத்திர) அமாவாசை.பின்னிரவு நரகசதுர்த்தசி ஸ்நானம். வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை  ஊஞ்சலில் காட்சியருளல். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

ஐப்பசி  10, அக்டோபர் 27, ஞாயிறு - ஸர்வ அமாவாசை. நரக சதுர்த்தசி ஸ்நானம் , தீபாவளி நோன்பு கேதார கௌரீ விரதம். திருவையாறு அமாதீர்த்தம். மதுரை  ஸ்ரீமீனாட்சியம்மன் வைரக்

கிரீடம் சாற்றியருளல்.

ஐப்பசி  11, அக்டோபர் 28, திங்கள் - கந்த சஷ்டி ஆரம்பம், மெய்கண்டதேவர் (அடியவர்) வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல். திருச்செந்தூர் கந்த சஷ்டி  உற்சவ ஆரம்பம். குருபெயர்ச்சி.

ஐப்பசி  12, அக்டோபர் 29, செவ்வாய் - கார்த்திக சுத்தப்ரதமை, சாந்த்ரமான கார்த்திக மாஸ ஆரம்பம். ஆலங்குடி பெரியவா ஜயந்தி.திருநெல்வேலி  ஸ்ரீகாந்திமதியம்மன் காலை மஞ்சள் நீராட்டு விழா. இரவு ரிஷபாரூடராய் பட்டினப் பிரவேசம்.

ஐப்பசி  13, அக்டோபர் 30, புதன் -  (பூசலார்). பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் குருபூஜை. திருலோசனஜீரககௌரி விரதம். முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி.

ஐப்பசி 14, அக்டோபர் 31, வியாழன் - சுக்லபட்ச சதுர்த்தி. நாகசதுர்த்தி . ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் ரதோற்சவம். தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர்  புறப்பாடு.

ஐப்பசி  15, நவம்பர் 01, வெள்ளி -  ஐயடிகள் காடவர்கோன். சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் ரதோற்சவம். மணவாள மாமுனிகள்

திருநட்சத்திரம்.

ஐப்பசி  16, நவம்பர் 02, சனி - சுக்லபட்ச சஷ்டி, திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரஸம்ஹாரம். சகல சுப்பிரமணிய தலங்களிலும் ஸ்கந்தஷஷ்டி சூரஸம்ஹாரப்  பெருவிழா. குமாரவயலூர் ஸ்ரீமுருகப்பெருமான்  காலை சக்திவேல் வாங்குதல்.

ஐப்பசி 17, நவம்பர் 03, ஞாயிறு -  திருச்செந்தூர் தெய்வானை திருக்கல்யாணம். வள்ளியூர் ஸ்ரீமுருகப்பெருமான் காலை கோ ரதத்திலும் இரவு பல்லக்கு சேவை.  திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவாரம்பம்.

 

ஐப்பசி  18, நவம்பர் 04, திங்கள்- ச்ரவண விரதம். பொய்கையாழ்வார், சிரவண விரதம். திருவோண விரதம். சிக்கல் சிங்காரவேலவர் வள்ளி, தேவயானையை  மணந்து இந்திர விமானத்தில் காட்சியருளல். பொய்கையாழ்வார் திருநட்சத்திரம்.

ஐப்பசி 19, நவம்பர் 05, செவ்வாய் - பூதத்தாழ்வார், கோஷ்டாஷ்டமி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் டோலோற்சவம். சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் விடாயாற்று  உற்சவம். பூதத்தாழ்வார் திருநட்சத்திரம்.

ஐப்பசி 20, நவம்பர் 06, புதன் - பேயாழ்வார். திருகோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம் சேவை. உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்நதியில்  சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.

ஐப்பசி 21, நவம்பர் 07, வியாழன் - மாயவரம் மயூரநாதர் கடைமுக உற்சவ ஆரம்பம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ரட்சாபந்தனம்.

ஐப்பசி  22, நவம்பர் 08, வெள்ளி - சுக்லபட்ச  சர்வ உத்தான ஏகாதசி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை.  திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குஜாம்பிகை புறப்பாடு.

ஐப்பசி  23, நவம்பர் 09, சனி-  சுக்லபட்ச மஹாபிரதோஷம். சாதுர்மாஸ்ய விரத பூர்த்தி. சனிப் பிரதோஷம்,  சிலுகதுவாதசி, க்ஷீராப்திநாதபூஜை, ஸ்ரீயாக்ஞவல்கிய  ஜயந்தி. சிவாலயங்களிலும்  இன்று மாலை ஸ்ரீநந்தீஸ்வரப் பெருமானுக்கு அபிஷேகம்.

ஐப்பசி  24, நவம்பர் 10, ஞாயிறு - திருகோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப்பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.

ஐப்பசி  25, நவம்பர் 11, திங்கள் - பௌர்ணமி, அன்னாபிஷேகம்,  திருமூலர். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் அன்னாபிஷேகம், காஞ்சி  ஸ்ரீகச்சிமயானேஸ்வரர் மஹா அன்னபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீவைகுண்டம்  ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

ஐப்பசி  26, நவம்பர் 12, செவ்வாய் - நெடுமாறானார். கார்த்திககௌரி விரதம், ஆ.கா.மா.வை, பௌர்ணமி , மஹா அன்னாபிஷேகம்.கோயம்பேடு வைகுண்டவாச  பெருமாள் அன்னகூடை உற்சவம், திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாத சுவாமி டோலோற்சவம். திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமான் அபிஷேக ஆராதனை விழா.  குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. குருநானக் ஜெயந்தி

ஐப்பசி 27, நவம்பர் 13, புதன் - கார்த்திகை பஹூள பிரதமை, (இடங்கழியார்). கிருத்திகை விரதம். சுவாமிமலை, விராலிமலை இத்தலங்களில் ஸ்ரீமுருகப்  பெருமான் புறப்பாடு. வேலூர் மாவட்டம் ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் தங்கரத காட்சி.  

ஐப்பசி 28, நவம்பர்14, வியாழன் - திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

ஐப்பசி  29, நவம்பர் 15, வெள்ளி -  திருவஹிந்திரபுரம் ஸ்ரீசுவாமி தேசிகர் டோலோற்சவம். சங்கடஹரசதுர்த்தி. ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

ஐப்பசி 30, நவம்பர் 16, சனி - சதுர்த்தி விரதம். கடைமுகம் தீர்த்தம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத்  திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு தரிசனம்.

- ந. பரணிகுமார்

Related Stories: