- லக்னோ
- ராம் சரண்
- இந்தியா
- ஷங்கர்
- தில் ராஜு
- சிரிஷ்
- ஹர்ஷித்
- ஸ்ரீ வெங்கடேஸ்வர படைத்துறை
- ஜீ ஸ்டுடியோஸ்
- Su.Venkatesan
- விவேக்
- கார்த்திக் சுப்பாராஜ்
லக்னோ: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள பிரமாண்டமான பான் இந்தியா படம், ‘கேம் சேஞ்சர்’. ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் தில் ராஜூ, சிரிஷ், ஹர்ஷித் தயாரித்துள்ளனர். சு.வெங்கடேசன், விவேக், கார்த்திக் சுப்பராஜ் இணைந்து கதைக்களத்தை வடிவமைத்து இருக்கின்றனர். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுத, எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். முக்கிய வேடங்களில் கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, ஜெயராம், சுனில், நவீன் சந்திரா நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் லக்னோவில் ஆயிரக்கணக்கான ரசிகர் களுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.
அப்போது ராம் சரண், கியாரா அத்வானி இருவரும் ஒரு பஸ்சின் மீது நின்று, ரசிகர்களை நோக்கி ‘பிளையிங் கிஸ்’ கொடுத்தனர். எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, தில் ராஜூ ஆகியோர் படத்தைப் பற்றி பேசினர். பவர்ஃபுல் ஐஏஎஸ் அதிகாரி யாக, இந்த சமூகத்துக்கு நல்லது செய்ய விரும்பும் இளைஞராக ராம் சரண் நடித்து இருக்கிறார். அரசியல் பின்னணியில் படம் உருவாகி இருக்கிறது. டீசரில் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், ராம் சரண் பேசும் ‘நான் யூகிக்க முடியாதவன்’ என்ற ஒரு பன்ச் டயலாக் இடம்பெற்று இருக்கிறது. வரும் ஜனவரி 10ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுக்க திரைக்கு வரும் இந்தப் படத்தின் வட இந்தியாவின் உரிமையை ஏஏ பிலிம்ஸ் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது.