×
Saravana Stores

அமரன் படத்துக்கு ராணுவ அனுமதி கிடைத்தது எப்படி? இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி

சென்னை: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள படம் ‘அமரன்’. ராஜ்கமல் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இது குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியது: இது தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதை. இந்தக் கதைக்கு காஷ்மீர் எங்களுக்கு தேவைப்பட்டது. அதற்காக பாதுகாப்பு துறையில நிறைய அனுமதி வாங்கினோம். அவர்களுக்கு முதலில் ஸ்கிரிப்ட்டை அனுப்பி, அதற்கு ஒப்புதல் கொடுத்தார்கள்.

அதில வரும் லொகேஷனை பார்க்க வைத்தனர். பிறகு ஷூட்டிங் நடத்துவதற்கு நிறைய உதவிகள் செய்தனர். ராணுவத்துடன் இணைந்துதான் படப்பிடிப்பு நடத்தினோம். மேஜர் முகுந்த் பணியாற்றிய அதே இடத்தைதான் படத்தில் அவர் அலுவலகமாக காட்டியிருக்கோம். இந்தப் படத்தை ராணுவம் பெருமையாக பார்க்கிறார்கள். இது போர் பற்றிய படம் என சிலர் நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை பயணம்தான் கதை.

அதில் அவன் சந்திக்கும் சம்பவங்களே படம். படத்தில் காஷ்மீர் பிரச்னைகள் பற்றி பேசி இருக்கிறேனா எனக் கேட்கிறார்கள். முகுந்த் வாழ்க்கையில் கடந்து வந்த சம்பவங்களில் எதுவெல்லாம் இடம்பெற்றதோ அந்த விஷயங்கள் எல்லாம் படத்தில் இருக்கும். இப்படத்தை தயாரித்த கமல்ஹாசன் சார், மகேந்திரன் சார், சோனி பிக்சர்ஸ் ஆகியோருக்கு நன்றி. இந்த படம் சாத்தியமானதற்கு இவர்கள்தான் காரணம்.

Tags : Rajkumar Periasamy ,Chennai ,Sivakarthikeyan ,Sai Pallavi ,Rajkamal International ,Sony Pictures ,Rajkumar Periyasamy ,Mukund Varadarajan ,Tamil Nadu ,
× RELATED ரஜினி ரசிகனான எனக்கு கமல் கொடுத்த ஊக்கம்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி