கோவையில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்ததால் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை

கோவை: கோவையில் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் மனமுடைந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு பொருட்காட்சி நடக்கிறது. இந்த பொருட்காட்சியில் போலீஸ் அரங்கத்தில் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை போலீசார் சுழற்சி முறையில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை அவினாசி ரோடு போலீஸ் பயிற்சி வளாக குடியிருப்பில் வசித்த, விருதுநகர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட, ஆயுதப்படை போலீஸ்காரர் காளிமுத்து (29), நேற்று முன்தினம் அங்கு பணியில் இருந்தார். மாலையில் இவர் வைத்திருந்த எஸ்.எல்.ஆர் ரக துப்பாக்கியை தனது வயிற்றில் வைத்து சுட்டார். இதில் ரத்த வெள்ளத்துடன் அவர் சரிந்து விழுந்தாகாளிமுத்துவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காளிமுத்து பரிதாபமாக இறந்தார். காளிமுத்துக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். காளிமுத்துவுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. பெட்டிங்கில் அதிக தொகையை  இழந்து விட்டதாகவும், அதை மீட்க திரும்ப அதிக தொகை வைத்து ரம்மி  விளையாடியதாகவும் தெரிகிறது.கடந்த 3 ஆண்டிற்கும் மேலாக இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை  இழந்துள்ளார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இப்படி சுமார் 20 லட்சம் ரூபாய் அளவுக்கு இவர் கடன் வாங்கி கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதுபற்றி குடும்பத்தினரிடம் கூறி அழுதுள்ளார். குடும்பத்தினர் தங்க நகையை விற்று பணத்தை கொடுத்துள்ளனர். தன்னால் குடும்பத்தினருக்கு சிரமம் ஏற்பட்டுவிட்டதே என்று காளிமுத்து மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்….

The post கோவையில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்ததால் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: