ஆவணி மாத விசேஷங்கள்

ஆவணி 1, ஆகஸ்ட் 18, ஞாயிறு - திருதியை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி  எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.

ஆவணி 2, ஆகஸ்ட் 19, திங்கள் - சதுர்த்தி.  திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல், வடமதுரை ஸ்ரீசௌந்திரராஜப் பெருமாள் விடாயாற்று உற்சவம்.
Advertising
Advertising

ஆவணி 3, ஆகஸ்ட் 20, செவ்வாய் - பஞ்சமி. திருச்செந்தூர் ஆவணி உற்சவ கொடியேற்றம், திண்டுக்கல் சாது கருணாம்பிகை குருபூஜை. சுவாமி மலை ஸ்ரீமுருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

ஆவணி 4, ஆகஸ்ட் 21, புதன் - சஷ்டி. திருச்செந்தூர், பெருவயல் இத்தலங்களில் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவாரம்பம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

ஆவணி 5, ஆகஸ்ட் 22, வியாழன் - சப்தமி. திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் சிங்க கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் புறப்பாடு கண்டருளல். சுவாமி மலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

ஆவணி 6, ஆகஸ்ட் 23, வெள்ளி - அஷ்டமி. ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி, தருமை ஸ்ரீஷண்முகர் அபிஷேகம், வேளூர் கிருத்திகை. கிருத்திகை, ஸ்ரீ வைகானஸ ஜெயந்தி.

ஆவணி 7, ஆகஸ்ட் 24, சனி - நவமி. வரகூர் உறியடி, ஆனந்தவல்லி அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், திருவையாறு, கண்டமங்கலம், வேதாரண்யம், பிள்ளையார், கணபதி அக்ரஹாரம் திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் முதலிய ஸ்தலங்களில் சதுர்த்தி உற்சவ ஆரம்பம். திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் பவனி. பாஞ்சராத்திர ஜெயந்தி. முனித்ரயஸ்ரீ ஜயந்தி.

ஆவணி 8, ஆகஸ்ட் 25, ஞாயிறு - தசமி . வேளூர் ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் உற்சவ ஆரம்பம், ஸ்ரீரங்கம் உறியடி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் காலை வெள்ளிக் கேடயத்திலும், இரவு வெள்ளி சிம்ம வாகனத்திலும் பவனி வரும் காட்சி.

ஆவணி 9, ஆகஸ்ட் 26, திங்கள் - ஏகாதசி. திருச்செந்தூர் சிவப்பு சாத்தி தரிசனம். மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி காலை ஊஞ்சலில் வீணை மோகிணி அலங்காரம். இரவு ராமாவதாரக் காட்சி. கரிநாள்.

ஆவணி 10, ஆகஸ்ட் 27, செவ்வாய் - துவாதசி. தருமை மகா மாரியம்மன் சம்வத்ஸராபிஷேகம், திருச்செந்தூர் பச்சை சாத்தி தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம்  எழுந்தருளல், பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கமல வாகனத்தில் திருவீதியுலா.

ஆவணி 11, ஆகஸ்ட் 28, புதன் - திரயோதசி. வடலூரில் மாதபூசம். மாதசிவராத்திரி. பிரதோஷம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளிக் கேடயத்திலும். இரவு ரிஷப வாகனத்திலும் புறப்பாடு.  

ஆவணி 12, ஆகஸ்ட் 29, வியாழன் - சதுர்த்தசி.  நாகை அதிபத்தர் ஐக்கியம், திருச்செந்தூர் தேரோட்டம். போதாயன அமாவாசை. திருவலஞ்சுழி ஸ்ரீஸ்வேத விநாயகர் திருவீதியுலா. அதிபத்த நாயனார், புகழ்த்துணை நாயனார் குருபூஜை. புகழ்த்துணையார் அதிபத்தர்.

ஆவணி 13, ஆகஸ்ட் 30, வெள்ளி - அமாவாசை. திருப்பனந்தாள் பொய்கை குளத்தில் ஸ்ரீபிரம்மனுக்கு சாபம் நீக்கி அருளியது. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதிவுலா.

ஆவணி 14, ஆகஸ்ட் 31, சனி - பிரதமை. கல்கி ஜெயந்தி. சந்திர தரிசனம். குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

ஆவணி 15, செப்டம்பர் 01, ஞாயிறு - துவிதியை. திருவாரூர் மடப்புரம் ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி குருபூஜை. விபத்தார கௌரி விரதம். ஹரித்ரா கௌரி விரதம். மறைஞான சம்பந்தர் நாயனார் குருபூஜை.

ஆவணி 16, செப்டம்பர் 02, திங்கள் - திருதியை. ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி. பாதூர் கருட சேவை, முக்கூர் ஸ்ரீஅழகியசிங்கர் திருநட்சத்திரம். சதுர்த்தி விரதம். ஸாமோபாகர்மம்.  திருவலஞ்சுழி ஸ்ரீஸ்வேத விநாயகர் ரதோற்ஸவம். குஜசாந்தி பூர்வஸாமோபாகர்மா.

ஆவணி 17, செப்டம்பர் 03, செவ்வாய்  - சதுர்த்தி, பஞ்சமி - ரிஷிபஞ்சமி, மதுராந்தகம் ஸ்ரீபாஷ்யகாரர் பஞ்ச சமஸ்கார உற்சவம். அவமாகம். மகாலக்ஷ்மி விரதம். மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண சுவாமி மச்சாவதார திருக்கோலம்.

ஆவணி 18, செப்டம்பர் 04, புதன் - சஷ்டி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

ஆவணி 19, செப்டம்பர் 05, வியாழன் - சப்தமி. குலச்சிறையார்.

ஆவணி 20, செப்டம்பர் 06, வெள்ளி - அஷ்டமி. தூர்வாஷ்டமி. ஜேஷ்டாஷ்டமி. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

ஆவணி 21, செப்டம்பர் 07, சனி - நவமி. ஆவணிமூலம், வேளூர் ஸ்ரீபஞ்சமூர்த்தி புறப்பாடு, திருவையாறு சூரியபுஷ்கரணியில் தீர்த்தம், இரவு தெப்பம், சென்னை திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜர் புறப்பாடு, அக்கரைவட்டம் ஸ்ரீசித்தானந்த ஸ்வாமி குருபூஜை. கேதார விரதம் மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கியானில் பவனி வரும் காட்சி. குங்குலியக்கலய நாயனார் குருபூஜை. லக்ஷ்மி ஆவாஹனம், கேதாரவிரத ஆரம்பம்.

ஆவணி 22, செப்டம்பர் 08, ஞாயிறு - தசமி. பிட்டுக்கு  மண் சுமத்தல், திருவையாறு தெப்பம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் திருவாதவூர் மதுரைக்கு எழுந்தருளல். ஆவணி மூலம்.

ஆவணி 23, செப்டம்பர் 09, திங்கள் - ஏகாதசி. சென்னை பைராகிமடம் பவித்ர உற்சவம் ஆரம்பம், ஸ்ரீரங்கம் பவித்ர உற்சவ ஆரம்பம்.   மதுரை ஸ்ரீமீனாட்சி புட்டுத் திருவிழா. ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

ஆவணி 24, செப்டம்பர் 10, செவ்வாய் - துவாதசி. மயிலாடுதுறை குமரக்கட்டளை ஸ்ரீசுப்ரமணியசுவாமிக்கும் வள்ளலார் கோயில் ஸ்ரீவதான்யேஸ்வர சுவாமிக்கு சம்வத்ஸராபிஷேகம். வைஷ்ணவ ஏகாதசி. வாமன ஜெயந்தி. திருவோண விரதம். விருதுநகர் ஸ்ரீசொக்கநாதர் ரதோற்சவம். ஸ்ரீமாதா ஸ்ரீபுவனேஸ்வரி ஜயந்தி.

ஆவணி 25, செப்டம்பர் 11, புதன்- திரயோதசி. திருவஹிந்திரபுரம் ஸ்ரீஹயக்கிரீவர் உற்சவ சாற்றுமறை. மாத பிரதோஷம். உத்திர கௌரி விரதம். ஓணம் பண்டிகை.

ஆவணி 26, செப்டம்பர் 12, வியாழன் - திரயோதசி . கதளீ கௌரி விரதம். சுவாமிமலை  ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நடராஜர் அபிஷேகம் அனந்த விரதம்.

ஆவணி 27, செப்டம்பர் 13, வெள்ளி - சதுர்த்தசி. உமாமகேஸ்வரவிரதம்,பௌர்ணமி விரத பூஜையில் சர்க்கரை அபிஷேகம், எள்ளுருண்டை சாத்துதல், சென்னை பைராகிமடம் பவித்ர உற்சவம் பூர்த்தி, வேளூர் ஸ்ரீமத் அக்ஷயலிங்கத்தம்பிரான் சுவாமிகள் மாகேசுவர பூஜை, திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாத

ஸ்வாமி பவித்ர உற்சவ சாற்றுமறை. ஆனந்த விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குஜாம்பிகை புறப்பாடு.  

ஆவணி 28, செப்டம்பர் 14, சனி - பௌர்ணமி . மஹாளயபக்ஷ ஆரம்பம். குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

ஆவணி 29, செப்டம்பர் 15, ஞாயிறு - பிரதமை. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருத்தேர். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

ஆவணி 30, செப்டம்பர் 16, திங்கள் - துவிதியை. தேவகோட்டை ஸ்ரீரங்க நாதர் புறப்பாடு.

ஆவணி 31, செப்டம்பர் 17, செவ்வாய் - திருதியை. ஸ்ரீரங்கம் பவித்ர உற்சவ சாற்றுமறை.  சங்கடஹர சதுர்த்தி. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி.

தொகுப்பு: ந.பரணிகுமார்

Related Stories: