×

இந்த வாரம் என்ன விசேஷம்?

மே 18, சனி - பெளர்ணமி. வைகாசி விசாகம். புத்த பூர்ணிமா.  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பால்மாங்காய் நைவேத்யம். வேளூர் வசந்தோற்சவம் பூர்த்தி, சீர்காழியில் ஸ்ரீசம்பந்தருக்கு ரட்சாபந்தனம். காஞ்சி ஸ்ரீகந்தகோட்டம் ஸ்ரீஷண்முகர் ரதம், தீர்த்தவாரி. ஸ்ரீ ரங்கம் ஏகவசந்தம் சாற்றுமுறை. ராமேஸ்வரம் வசந்த உற்சவ பூர்த்தி, பழநி தேர், கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் முகுடேஸ்வரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மே 19, ஞாயிறு - காஞ்சி ஸ்ரீமகாபெரியவாள் ஜெயந்தி. காஞ்சி ஸ்ரீதேவராஜஸ்வாமி வசந்த உற்சவ சாற்றுமுறை, சேலையூர் ஸ்ரீமத் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் ஆராதனை. மதுரை கூடலழகர் உபய நாச்சியார்களுடன் தேரோட்டம். திருவாரூர் கண்டிரமாணிக்கம் சீதா ராமச்சந்திரமூர்த்திக்கு காலை 9 மணிக்கு திருமஞ்சனம், மாலை 4 மணிக்கு திருக்கல்யாணம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் குமாரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மே 20, திங்கள் - ஆச்சாள்புரம் ஸ்ரீதோத்திர பூர்ணாம்பிகா சமேத ஸ்ரீ திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம். அரியக்குடி ஸ்ரீனிவாசப்பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் லலிதா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மே 21, செவ்வாய் - தஞ்சை முத்துப்பல்லக்கு, தருமை ஞானபுரீஸ்வரர் திருக்கல்யாணம். திருவாப்பாடி இரவு 63வர். திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மாகேசுவர பூஜை. வைகாசி மூலம். காரைக்குடி கொப்புடையம்மன் தேரோட்டம்.  கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் மங்களா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மே 22, புதன் - சங்கடஹரசதுர்த்தி. திருப்பாதிரிபுலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் கோயிலில் சைபர் ஸ்வாமிகள் ஜெயந்தி. சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம். காரைக்குடி கொப்புடையம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் விமலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மே 23, வியாழன் - தருமை திருத்தேர். திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் வருஷாபிஷேகம். தருமபுரி ஸ்ரீஞானபுரீஸ்வரர், காஞ்சி ஸ்ரீதேவராஜஸ்வாமி மகா ரதோற்சவம். சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு திருத்தேர். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் உத்பலாக்ஷி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மே 24, வெள்ளி - தருமை 26வது சந்நிதானம் காவிரியில் திருமஞ்சனமாடி குருமூர்த்த வழிபாடு. ஸ்ரீபாம்பன் சுவாமிகள் குருபூஜை. திருவோண விரதம்.  கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் மஹோத்பலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி