×

குட் பேட் அக்லி காட்சிகள் லீக்: 8 பவுன்சர்களை நியமித்த படக்குழு

சென்னை: அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்து விட்டு அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது 63வது படமான ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது. சமீபத்தில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

இந்த படத்தில் நடிகர் பிரசன்னா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக அவரது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்த நிலையில், சமீபத்தில், அஜித் மற்றும் பிரசன்னா இணைந்து இந்த படத்தில் நடித்த காட்சிகள் இணையத்தில் வெளியானது. இதனால், பெரும் அதிர்ச்சி அடைந்த இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இது போன்ற ஒரு தவறான செயலில் ஈடுபட கூடாது என மொத்த படக்குழுவையும் அழைத்து கண்டித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல், படைப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பை படக்குழு பலப்படுத்தி உள்ளனர். அதன்படி 8 பவுன்சர்களை நியமித்துள்ளார். அவர்களின் வேலையே, யாராவது செல்போனில் படம் பிடிக்கிறார்களா என்பதை கண்காணிப்பதுதானாம்.

The post குட் பேட் அக்லி காட்சிகள் லீக்: 8 பவுன்சர்களை நியமித்த படக்குழு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Ajit ,Adik Ravichandran ,Pongal festival ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அஜித் படம்: ஜி.வி. சூசக பதில்