தினை அடை

தேவையான பொருட்கள்

தினை அரிசி -200 கிராம்,  

புழுங்கல் அரிசி -100 கிராம்,

துவரம் பருப்பு -100 கிராம்,

உளுத்தம் பருப்பு -100 கிராம்,

கடலைப்பருப்பு -100 கிராம்,

காய்ந்த மிளகாய் -4,

வெந்தயம் -4 கிராம்,

இஞ்சி -4 கிராம்,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

தினை அரிசி, புழுங்கல்அரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அவற்றுடன் காய்ந்த மிளகாய், வெந்தயம், இஞ்சி, உப்பு சேர்த்து சிறு குருனையாக அரைக்க வேண்டும். அரைத்த மாவை தோசைக்கல்லில் அடையாகத் தட்டி இருபுறமும் வேக வைத்து எடுக்கவேண்டும். மணமணக்கும் தினை அடை தயார்.

Related Stories: