×

லிவிங் டு கெதர் முறையில் வாழும் 69 வயது நடிகை: வாழ்க்கை புத்தகத்தில் பகீர் தகவல்

மும்பை: இந்தி நடிகை ரேகா, தனது 69 வயதில் லிவிங் டு கெதர் முறையில் ஒருவருடன் வாழ்ந்து வருவதாக பாலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ரேகாவின் இளமை காலத்தில் அவரது பெயர் நடிகர்கள் கிரண் குமார் மற்றும் வினோத் மேத்தாவுடன் இணைக்கப்பட்டது, ஆனால் அமிதாப் பச்சனுடனான அவரது காதல் தான் அதிகம் பேசப்பட்டது. ‘தோ அஞ்சானே’ படத்தின் படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருப்பினும், இந்த நேரத்தில் அமிதாப் திருமணமானவர். இது அவரது மனைவி ஜெயாவுக்கு தெரிந்ததும் பிரச்னை ஏற்பட்டது. அமிதாப் பச்சன் வீட்டில் இல்லாதபோது, ​​ரேகாவை இரவு உணவிற்கு அழைத்தார் ஜெயா. அமிதாபை விட்டு விலகும்படி ரேகாவிடம் கூறினார். அதன் பிறகு அவர் அமிதாபை பிரிந்துவிட்டார் என ஒரு தகவல் பாலிவுட்டில் உலா வந்தது.

1990ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வாலை ரேகா திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், திருமணமாகி 3 மாதங்களில் முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரேகாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான ‘ரேகா தி அன்டோல்ட் ஸ்டோரி’யை யாசிர் உஸ்மான் எழுதியுள்ளார். அதில் முகேஷ் இறந்த பிறகு ரேகா தனது செயலாளர் பர்சானாவுடன் லிவ்-இன் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. பர்சானா மட்டுமே ரேகாவின் படுக்கையறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என்று யாசிர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார். ரேகாவின் வீட்டு வேலைக்காரிக்கு கூட அவரது படுக்கையறைக்குள் செல்ல அனுமதி இல்லை. பர்சானா தான் ரேகாவின் நிழலாக இருக்கிறார். ரேகாவுக்கு 69 வயதாகிறது. இப்போதும் அவர்களின் நெருங்கிய நட்பு தொடர்கிறது என யாசிர் உஸ்மான் கூறியுள்ளார். இந்த தகவல் பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post லிவிங் டு கெதர் முறையில் வாழும் 69 வயது நடிகை: வாழ்க்கை புத்தகத்தில் பகீர் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : MUMBAI ,Rekha ,Bollywood ,Kiran Kumar ,Vinod Mehta ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சினிமாவா எடுக்குறாங்க பாலிவுட்காரங்க?: கங்கனா கடும் விமர்சனம்