×

படம் ஓடாவிட்டால் நடிகைகளை குறை சொல்கிறார்கள்: மாளவிகா மோகனன் வருத்தம்

மும்பை: திரைப்படங்கள், வெப்தொடர்கள், சமூக வலைத்தளங்களின் அன்றாட அப்டேட்டுகளின் மூலமாக ரசிகர்களிடம் பரிச்சயமாகியுள்ள மாளவிகா மோகனன், சமீபத்தில் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், திரையுலகின் நிலை குறித்து மிகவும் வருத்தப்பட்டுள்ளார். அவர் கூறியதாவது: தென்னிந்திய திரையுலகிற்கும், இந்திப் படவுலகிற்கும் கலாச்சார ரீதியான வேறுபாடுகள் இருப்பதை கண்கூடாகப் பார்க்கிறேன்.

எந்த மொழியாக இருந்தாலும், ஒரு திரைக்கலைஞராக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெவ்வேறு மொழி, உணவு, பேசக்கூடிய அல்லது பேசக்கூடாத விதிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். காரணம், நடிகர்கள் என்பவர்கள் நவீன நாடோடி களைப் போன்றவர்கள். ஒருநாள் ஐதராபாத் என்றால், அடுத்த நாள் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு குக்கிராமம் என்று மாறி, மாறி பயணிக்க வேண்டியிருக்கும். அதனால், நடிகர்கள் தாங்கள் இருக்கும் இடங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தமிழிலும், தெலுங்கிலும் 8 அல்லது 9 மணி நேரம் படப்பிடிப்பு நடக்கும். இந்தியில் 12 அல்லது 13 மணி நேரம் படப்பிடிப்பு நடத்தப்படும். சில நேரங்களில் 14 மணி நேரம் கூட நடத்தப்படுகிறது. நடிகர்களுக்கு கிடைக்கும் அதிக முக்கியத்துவம், நடிகைகளுக்கு மட்டும் ஏனோ கிடைப்பது இல்லை. ஒரு படம் ஹிட்டாகிவிட்டால், நடிகர்கள்தான் அதற்கு முழுமையான காரணம் என்பதாகச் சொல்கிறார்கள். ஓடவில்லை என்றால், முதலில் ஹீரோயினைத்தான் குறை சொல்கிறார்கள். தென்னிந்திய சினிமாவில் இதுபோன்ற நிலை சர்வசாதாரணமாக காணப்படுகிறது.

The post படம் ஓடாவிட்டால் நடிகைகளை குறை சொல்கிறார்கள்: மாளவிகா மோகனன் வருத்தம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Malavika Mohanan ,Mumbai ,Kollywood Images ,
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் சரிவு..!!