×

ஒரே படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே, மமிதா பைஜு

சென்னை: தற்போது ‘விஜய் 69’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள படத்தை ஹெச்.வினோத் எழுதி இயக்குகிறார். இதை கன்னட நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். விஜய் நடிப்பில் அவர் இசை அமைக்கும் 5வது படம் இது. ஏற்கனவே அவர் விஜய் நடிப்பில் வெளி யான ‘கத்தி’, ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’, ‘லியோ’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்து இருந்தார். விஜய்க்கு இதுவே கடைசி படம் என்று சொல்லப் படுகிறது. முக்கியமான கேரக்டரில் பாலிவுட்டின் முன்னணி வில்லன் பாபி தியோல் நடிக்கிறார்.

தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடிக்கும் ‘கங்குவா’ படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘சூர்யா 44’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்ட படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தவிர, ‘விஜய் 69’ படத்திலும் பூஜா ஹெக்டே, ‘பிரேமலு’ மமிதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், நரேன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கலை இயக்குனராக செல்வகுமார் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

The post ஒரே படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே, மமிதா பைஜு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Pooja Hekte ,Mamita Paiju ,H. Vinod ,K. V. ,My Productions ,Anirit ,Vijay ,Pooja Hekde ,Mamita Baiju ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சதுரங்க விளையாட்டு படம்