×

தாதா போலீஸ் கதையில் சம்யுக்தா

சென்னை: ஆனந்த் ராஜ் மற்றும் சம்யுக்தா இணைந்து நடிக்கும் புதிய படம் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கும் இந்தப் படத்தை அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி. சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர். முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ் மற்றும் ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அஷோக் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். கலை இயக்குநராக ராகவா குமார், படத்தொகுப்பு பணிகளை தேவராஜ் மேற்கொள்கிறார். இந்தப் படத்தின் கதையை சுகந்தி அண்ணாதுரை எழுதியுள்ளார்.

 

The post தாதா போலீஸ் கதையில் சம்யுக்தா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samyukta ,Chennai ,Anand Raj ,Pooja ,Mukundan ,V. Anna Productions ,Sukanti ,Annadurai.… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்