×
Saravana Stores

மேடை சரிந்தது பிரியங்கா மோகன் உயிர் தப்பினார்

ஐதராபாத்: சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’, சிவகார்த்திகேயனுடன் ‘டான், டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தெலங்கானா மாநிலம், தோரூரில் நேற்று ஷாப்பிங் மால் திறப்பு விழா நடந்தது. இதற்காக மாலுக்கு வெளியே பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடையில் நடிகை பிரியங்கா மோகன், பாலகுருத்தி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ஜான்சி ரெட்டி உள்பட பலர் இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மேடை சரிந்தது. கீழே விழுந்த பிரியங்கா மோகனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. ஜான்சி ரெட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டு, உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மேலும் பலர் காயம் அடைந்தனர். இது குறித்து பிரியங்கா மோகன் கூறும்போது, ‘கடவுள் அருளால் லேசான காயங்களுடன் தப்பினேன். பாதிக்கப்பட்ட பலரும் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்றார்.

The post மேடை சரிந்தது பிரியங்கா மோகன் உயிர் தப்பினார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Priyanka Mohan ,Hyderabad ,Suriya ,Sivakarthikeyan ,Thorur, Telangana ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரியங்கா மோகன்