×

இயக்குனர் ஆனார் சூர்யா மகள்

சென்னை: நடிகர் சூர்யா, ஜோதிகா தம்பதியின் மகள் தியா ஆவணப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். மேலும் அப்படத்திற்கு விருதும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதனை ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்து மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தியா, தனது பள்ளியில் நடைபெற்ற போட்டிக்காக ‘லீடிங் லைட்’ என்ற ஆவணப்படம் ஒன்றினை எடுத்து விருது பெற்றுள்ளார். இது தொடர்பாக ஜோதிகா வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ‘திரைத்துறையில் ஒளிப்பதிவு தொடர்பான பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளை ஆவணப்படமாக தயாரித்ததற்கு பெருமைப்படுகிறேன் தியா. இதே போன்று தொடர்ந்து செயல்படு. இதுபோன்ற சம்பவங்களில் வெளிச்சம் பாய்ச்சியதற்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆவணப் படத்துக்காக கொடுக்கப்பட்ட சான்றிதழ்களுடன் தியா இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமிலும் ஜோதிகா பகிர்ந்துள்ளார்.

The post இயக்குனர் ஆனார் சூர்யா மகள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Surya ,CHENNAI ,Suriya ,Jyotika ,Diya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அண்டி பிழைத்து சமீபத்தில்...