கலசபாக்கம் அருகே காப்பலூரில் 42 அடி உயர வீர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்

கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே உள்ள காப்பலூரில் 42 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம் நடந்து. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் மரகதவள்ளி தாயார் சமேத பெருமாள் கோயில் வாசலில் 42 அடி உயரத்தில் வீர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டது. இதற்கு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் யாகசலை பூஜைகள் நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து  நேற்று காலை சிலையின் உச்சியில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், கலசபாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Advertising
Advertising

Related Stories: