குடியாத்தத்தில் கோலாகலம் : கருப்புலீஸ்வரர் கோயில் தேரோட்டம்

வேலூர்: குடியாத்தத்தில் பிரசித்தி பெற்ற கருப்புலீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. குடியாத்தம் நெல்லூர் பேட்டையில் உள்ள கருப்புலீஸ்வரர் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்  செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். பின்னர் ஸ்ரீபுரம் சக்தி அம்மா சிறப்பு பூஜை செய்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

Advertising
Advertising

இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும், வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தேரில் எழுந்தருளிய கருப்புலீஸ்வரர் மீது உப்பு, மிளகு போன்றவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தினர். இதில், டிஎஸ்பி சரவணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: