வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பங்குனி பாடைக்காவடி திருவிழா

வலங்கைமான்: வலங்கைமான் வரதராஜம் பேட்டைத்தெரு மகாமாரியம்மன் கோயில்  பங்குனி பாடைக்காவடி திருவிழா வரும் 24ம்தேதி(ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளதால் தினந்தோறும் பல்வேறு வாகனத்தில் அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்று வருகின்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி வரதராஜம் பேட்டைத்  தெருவில் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இது சக்திஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும்  பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 8.ம் தேதி பூச்சொரிதல் விழாவும், மார்ச் 10ம்தேதி முதல் காப்புகட்டும் நிகழ்ச்சியும்,  மார்ச் 17ம் தேதி இரண்டாவது காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முதல்நாள் திருவிழாவான அன்று அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதியுலாகாட்சியும் அதனையடுத்து இரண்டாம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் அம்பாள் காமதேனு வாகனத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று வெள்ளி அன்ன வாகனத்திலும்,  நான்காம் நாளான இன்று சிம்மவாகனத்திலும், ஐந்தாம் நாள் திருவிழாவான நாளை ரிஷபவாகனத்திலும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆறாம்நாள் திருவிழாவில் யானை வாகனத்திலும், 7ம் நாள் திருவிழாவில் குதிரை வாகனத்திலும் அம்பாள் வீதியுலா காட்சி நடைபெற் உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான  வரும் 24ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) பாடைக்காவடி திருவிழா நடைபெற உள்ளது.  8ம் நாள் திருவிழாவான அன்று வெள்ளி அன்னவாகனத்தில் எழுந்தருளி அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். அதனையடுத்து விழாவின் ,மேலும்  31ம் தேதி புஷ்பபல்லாக்கும், ஏப்ரல் 7ம் தேதி கடை ஞாயிறு விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: