திருமானூர் மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிட கரையின் வடபுறம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பக்தர்கள் கொள்ளிடம் ஆற்றிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் திரு உருவபடத்துடன் பூக்கூடைகளை ஊர்வலமாக எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் கோயிலில் உள்ள  மகா மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து  பொது மக்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாணவேடிக்கை, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Advertising
Advertising

Related Stories: