குறிஞ்சிப்பாடி ரயிலடி செல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி ரயிலடியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயில், ஆஞ்சநேயர், செல்வமுத்து மாரியம்மன் கோயில்கள் புனரமைக்கப்பட்டு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 15ம் தேதி மாலை 5 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, மாலை முதற்கால வேள்வி, பன்னிரு திருமுறை விண்ணப்பம், தீபாராதனை நடைபெற்றது.

Advertising
Advertising

16ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி நடந்தது. 17ம் தேதி காலை நான்காம் கால வேள்வியும் தொடர்ந்து புனிநீர் கடம் புறப்பாடு, பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மூல மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு சிறப்பு மஹா அபிஷேகம், தீபாராதனையும் மாலை திருவிளக்கு வழிபாடு, சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.

Related Stories: