ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் கருடசேவை : திரளானோர் தரிசனம்

ஸ்ரீவைகுண்டம்: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் மாசித்திருவிழாவில் கருடசேவை நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயிலில் சுவாமி நம்மாழ்வாருக்கு ஆண்டுதோறும் மாசி திருவிழா பக்தர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 14ம்தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் நம்மாழ்வார் வீதியுலா  நடந்து வருகிறது.

நேற்று காலை வாகன மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனமும், நாலாயிர திவ்யபிரபந்த கோஷ்டியும் நடந்தது. தொடர்ந்து மாலை உற்சவர் பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் ஹம்ச வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தனர். நிர்வாக அதிகாரி விஸ்வநாத், தக்கார் இசக்கியபப்பன், ஆய்வாளர் முருகன், ஸ்ரீ ஆதிநாதர் ஆழ்வார் கைங்கர்ய சபா தலைவர் வரதராஜன், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பக்தர்கள் என திரளானோர் தரிசித்தனர். விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் வரும் 22ம் தேதி நடக்கிறது.

Related Stories: