மேலூர் அருகே நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம்

மேலூர்: மேலூர் அருகே நொண்டிக்கோவில்பட்டியில் உள்ள நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. மேலூர் நொண்டிக் கோவில்பட்டி ஆற்றுக்கால் மேல்கரை வெங்கடேஷ் நகரில் உள்ள நாகம்மாள் கோயில் புதிதாக கட்டப்பட்டது. இதற்கான கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு முன்னதாக கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்யப்பட்டு பின்னர் தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று சிவன் கோவில் குருக்கள் தட்சிணாமூர்த்தி தலைமையில் கும்பாபிஷேகத்திற்கு புனித நீர் விடப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் மேலூரை சுற்றி உள்ள பல கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாகம்மாள் கோவில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர். பாலமேடு அருகே மறவபட்டி கூடமுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. முதல்நாள் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் பூஜைகள் நடந்தது. இதில் அழகர்மலை நூபுரகங்கை, காவேரி, கங்கை, வைகை, காசி, ராமேஸ்வரம், மஞ்சமலை, உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் அங்கு வைத்து வேதமந்திரங்களுடன் பூஜைகள் நடந்தது. மறுநாள் காலை மேளதாளம் முழங்க தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோபுர உச்சியில் உள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

Related Stories: