வடுவூர் வடபாதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

மன்னார்குடி; மன்னார்குடி அடுத்த வடுவூர் வடபாதி உள்ள பிரசித்தி பெற்ற கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் வடபாதியில் பிரசித்தி பெற்ற  கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு தை மாதத்தை யையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடத்தப் பட்டது.
Advertising
Advertising

இதில் உற்சவர் கோவிந்தராஜ பெருமாளை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அலங்கரித்து ஊஞ்சலில் எழுந்தருளச் செய்தனர்.சுவாமிகளை  சுற்றிலும் ஏராளமான விளக்குகள் ஏற்றி வைத்து இருந்தனர். திருப்பதி உற்சவர் சீனிவாச பெருமாள் போல கோவிந்தராஜ சுவாமிக்கு  அலங்காரம் செய்திருந்தனர். தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். அதனைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப் பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: