கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மாசிமக தெப்ப திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது

கரூர்: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மாசிமக தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

தாந்தோணிமலை வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பிப்ரவரி 12ம்தேதி முதல் மார்ச் 1ம்தேதி வரை தெப்பத்தேரோட்ட விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை, கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் 18ம்தேதியும், 20ம்தேதி காலை ததேரோட்டம், 22ம்தேதி மாலை 7மணியளவில் தெப்பத் தேரோட்டம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நேற்று முதல் பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Advertising
Advertising

Related Stories: