கொடைக்கானலை அடுத்த பண்ணைக்காட்டில் மயான காளி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

கொடைக்கானல்: கொடைக்கானலை அடுத்த பண்ணைக்காடு மயான காளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கொடைக்கானலை அடுத்து உள்ளது பண்ணைக்காடு. இங்கு உள்ள மயான காளியம்மன் கோயிலில் நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 ஆலடிப்பட்டி வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து தேவதைகளுக்கு கனி வைத்து தீர்த்தங்கள் மற்றும் முளைப்பாரி எடுத்து வரப்பட்டது.

Advertising
Advertising

மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடும் வேள்வியின் துவக்கமும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை தொடங்கியது. இதையடுத்து நேற்று காலை 10 மணிக்கு பின்பு மயான காளியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Related Stories: