பள்ளிபாளையம் ஓம்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூக ஓம்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை வாஸ்து சாந்தி செய்யப்பட்டது. மறுநாள் கோயிலில் அதிகாலை கணபதி பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜையும், அதை தொடர்ந்து கோபுர சிலைகள் கண் திறத்தல், விமான கலசம் அமைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நேற்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகளும், நான்காம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

பின்னர் கோபுர கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழு நிர்வாகிகள் பெரியதனம் செந்தில் குமார், மாரிமுத்து, அங்குராஜ், செந்தில்குமார், அருணகிரி, ஆறுமுகம், ராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: