என்னென்ன தேவை?
முலாம் பழம் அல்லது கிர்ணிப்பழம் சிறியது - 1, கெட்டியான தேங்காய்ப்பால் - 1 கப்,
பொடித்த வெல்லம் - 1/2 கப் அல்லது தேவைக்கு, ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை, குங்குமப்பூ - சிறிது,அலங்கரிக்க செர்ரி பழம் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?பழத்தின் தோல், விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு கரைத்து வடிகட்டவும். மீண்டும் வெல்லக்கரைசலை கொதிக்க விட்டு சிறிது கெட்டியாக வந்ததும் இறக்கி கைவிடாமல் கலக்கவும். சிறிது சூடாக இருக்கும்போதே கெட்டியான தேங்காய்ப்பால், நறுக்கிய பழத்தை சேர்த்து கைவிடாமல் கலக்கவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து ஆறியதும், ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து செர்ரிப் பழங்களால் அலங்கரித்துப் பரிமாறவும்.