பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

பழநி: விடுமுறை தினத்தின் காரணமாக பழநி கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விடுமுறை தினத்தின் காரணமாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஐயப்ப பக்தர்களின் வருகையும் சேர்ந்ததால் அதிகாலை முதலே மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறைப்படி சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் 2 மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பக்தர்கள் வந்த வாகனங்கள் அடிவாரப் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. கூட்ட நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அடிவார பகுதியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட வேண்டுமென பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சுற்றுலா பஸ் நிலையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமெனவும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: