சுவாமிமலை முருகன் கோயிலில் கார்த்திகை விழா கொடியேற்றம்

கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த சுவாமிமலை முருகன் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 23ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. முருகனின் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் புகழ்பெற்றது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்வித்ததால் சிவகுருநாதனாக விளங்கும் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை திருவிழா நடைபெறும். இந்த விழாவையொட்டி நேற்று  முன்தினம் விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி நடந்தது. நேற்று காலை கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அப்போது வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் கொடியேற்றதுடன் விழா துவங்கியது. இதைதொடர்ந்து சுப்பிரமணியசுவாமி, பரிவார தெய்வங்களுடன்  மலை கோயிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இன்று முதல் வரும் 23ம் தேதி வரை காலை மற்றும் இரவில் படிச்சட்டம், பல்லக்கு, பூத, ஆட்டுகிடா, வெள்ளிமயில், யானை, காமதேனு, வெள்ளிக்குதிரை வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 23ம் தேதி காலையில் தேரோட்டம், இரவு 9 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா, திருக்கார்த்திகை தீபக்காட்சி நடக்கிறது.

Related Stories: