வென்னிமலை கோயிலில் திருக்கல்யாண வைபவம் : பக்தர்கள் திரளானோர் பங்கேற்பு

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் காமராஜர் நகரிலுள்ள வென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 13ம் தேதி நடைபெற்றது.  நேற்று முன்தினம் சுவாமி  அம்பாள் தபசு மண்டபம் செல்லுதல், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு பக்தர்கள் சுவாமி காட்சி அருளுதல், இரவு 8 மணிக்கு சுவாமி  அம்பாளுக்கு திருக்கல்யாணம் வைபவம், மாலை மாற்றும் நிகழ்ச்சி, மாங்கல்ய தாரணம் நடந்தது. நிகழ்ச்சியில் கீழப்பாவூர், பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகள் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: