வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மாட வீதி பவனி

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, எல்லை தெய்வ வழிபாட்டின் நிறைவாக, நேற்று இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் பவனி வந்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்திபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.

Advertising
Advertising

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா எந்த இடையூறும் இல்லாமல், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்க வேண்டி கடந்த மூன்று நாட்களாக எல்லை தெய்வ வழிபாடு நடந்தது, அதன்படி, முதல் நாளான்று துர்க்கை அம்மன் உற்சவமும், நேற்று முன்தினம் பிடாரியம்மன் உற்சவமும் நடந்தது. எல்லை தெய்வ வழிபாட்டின் நிறைவாக, நேற்று இரவு விநாயகர் உற்சவம் நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோ்யிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Related Stories: