×

சாமானியனில் ஜோடியும் இல்லை பாட்டும் இல்லை: ராமராஜன் கலகல

சென்னை: ராமராஜனும், இசை அமைப்பாளர் இளையராஜாவும் 23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள படம், ‘சாமானியன்’. இதை ‘தம்பிக்கோட்டை’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ ஆகிய படங்களை தொடர்ந்து ஆர்.ராகேஷ் இயக்கியுள்ளார். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ளார். ஸ்மிருதி வெங்கட், அபர்னிதா, லியோ சிவகுமார், நக்‌ஷா சரண், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ளனர்.

அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்ய, மிரட்டல் செல்வா சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம், வரும் 23ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் ராமராஜன், நக்‌ஷா சரண், லியோ சிவகுமார், ஆர்.ராகேஷ் ஆகியோர் படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது ராமராஜன் கூறியதாவது: இது எனக்கு 45வது படம். இதில் வழக்கமான ராமராஜன் தெரியக்கூடாது என்பதில் இயக்குனர் பிடிவாதமாக இருந்தார்.

அதனால், எனது ஸ்டைல் கலர் சட்டைகளை அணியவில்லை. 10 நாட்கள் வளர்த்த தாடியுடன், ஜோடி இல்லாமல், பாட்டு இல்லாமல் நடித்துள்ளேன். இளையராஜாவும், நானும் இணைந்துள்ள படத்தில் பாட்டு இல்லையா என்று கேட்காதீர்கள். கதை அப்படி. நிறைய புதுமுகங்கள் வந்துள்ளதால், அவர்களிடம் இருந்து நான் என்ன வித்தியாசமாக கொடுக்க முடியும் என்று யோசித்து புதிய படங்களில் நடிப்பேன். எனது மகனும், மகளும் சினிமாவுக்கு வர ஆசைப்படவில்லை.

The post சாமானியனில் ஜோடியும் இல்லை பாட்டும் இல்லை: ராமராஜன் கலகல appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ramrajan Kalakala ,Chennai ,Ramarajan ,Ilayaraja ,R. ,Rakesh. V. ,Echetra Entertainment ,Madizhakan ,Smriti Venkat ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னையில் தங்கையை கத்தியால் குத்திய அண்ணன் கைது