இந்த வாரம் என்ன விசேஷம்?

செப்டம்பர் 22, சனி  

Advertising
Advertising

மகா பிரதோஷம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. நெல்லை கெட்வெல் ஸ்ரீஆஞ்சநேயருக்கு 5008 வடை அலங்காரம். கரூர் தான்தோன்றி பெருமாள் கஜலக்ஷ்மி வாகனத்தில் பவனி.உத்ரகெளரீ விரதம், புரட்டாசி முதல் சனிக்கிழமை.

செப்டம்பர் 23, ஞாயிறு

நரசிங்க முனையரையர். திருக்கடவூர் ஸ்ரீகால ஸம்ஹார மூர்த்தி அபிஷேகம்; மாலை நடராஜர் அபிஷேகம். அனந்த விரதம். கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேசர் பின்னக்கிளி வாகனத்தில் பவனி. மதுரை தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசர் தெப்பம். திருக்கடவூர் ஸ்ரீகாலசம்காரமூர்த்தி அபிஷேகம்,  திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

செப்டம்பர் 24, திங்கள்  

பௌர்ணமி; திருவண்ணாமலை கிரிவலம் 24.9.2018 காலை 7.46AM முதல் 25.9.2018 காலை 8.48AM. நிறை பணி விழா. உமாமஹேஸ்வர விரதம். கரூர் தான்தோன்றி பெருமாள் காலை பல்லக்கு. இரவு கருட சேவை. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் ரதம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம்.

செப்டம்பர் 25, செவ்வாய்  

மஹாளய பட்சம் ஆரம்பம். அப்பய்ய தீக்ஷிதர் ஜெயந்தி. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் ஸஹஸ்ர தங்கப் பூமாலை சூடியருளல். திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

செப்டம்பர் 26, புதன்  

கரூர் தான்தோன்றி பெருமாள் ஊஞ்சல். தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு.

செப்டம்பர் 27, வியாழன்  

பிரஹதீ கெளரீ விரதம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி வீதியுலா. ருத்ர பசுபதியார் குரு பூஜை.

செப்டம்பர் 28, வெள்ளி  

சங்கடஹரசதுர்த்தி, மஹாபரணி. பஞ்சமி.  ராமேஸ்வரம் அம்பாள் தங்கப் பல்லக்கு. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி வேதவல்லித் தாயாருக்கு திருமஞ்சன சேவை.

Related Stories: