பெரம்பலூர் பகுதியில் கன மழை எதிரொலி ரஞ்சன்குடி கோட்டை கொத்தள சுவர் சரிந்து விழுந்து சேதம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத் தலம். நில நடுக்கத்திற்கே சரியாத ரஞ்சன்குடி கோட்டையின் கொத்தளம். கன மழைக்கு சரிந்து விழுந்தது.பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரலாற்று ரீதியாகப் பெருமை சேர்க்கும் சுற்றுலாத் தலம் ரஞ்சன்குடி கோட்டை. பெரம்பலூலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 18 கிலோ மீட் டர் தூரத்தில், மங்களமேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன்குடியில் அமைந்துள்ள இந்த கோட்டை, கிபி 16ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. ஒரு குன்றை சுற்றிலும் எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோட்டைக்கான கட்டுமானப் பணி, நவாப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்த தூங்கானை மறவன் என்ற குறுநில மன்னரால் தொட ங்கப்பட்டது. ஆற்காடு நவாப்கோட்டை, ரஞ்சன்குடி கோட்டை, துருவத்துக்கோட்டை என பல பெயர்களில் இந்த கோட்டை அழைக்கப்படுகிறது.சந்தா சாஹிப்- பிரெஞ்சு கூட்டுப் படைக்கும், முகமது அலி-ஆங்கிலேய கூட்டுப் படைக்கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால்கொண்டா போர், ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடந்ததாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. இன்றளவும் இக்கோட்டையைச் சுற்றி அகழிகள், கோட்டைக்கு உள்ளே விதான மண் டபம், பீரங்கி மேடை, கொடி மேடை, தண்டனைக் கிணறு, வெடிமருந்துக் கிடங்கு, புறவழிச் சுரங்கப் பாதை, பிற்கால பாண்டியர் ஆட்சியில், முகமதியர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட மண்டபங்கள், இயற்கைச் சீற்றங்க ளால் பாதிக்காதபடி இருப்பதற்கோ, துப்பாக்கிகளால் குறிபார்க்கவோ துளைகள் இடப்பட்ட சுற்றுச் சுவர்கள், குதிரைலாயம் ஆகியன சாட்சிகளாக உள்ளன.தற்போது இக்கோட்டை இந்திய தொல்லியல் துறையின் சென்னை மண்டல கட்டுப்பாட்டில் இருந்து வரு கிறது. நிலநடுக்கத்தால் கூட பாதிப்படையாத இந்த கோட்டையின் கொத்தளம் டிசம்பர் மாதம் பெய்த கனமழைக்குச் சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நவம்பர், டிசம்பரில் பெய்த கனமழையின் காரணமாக ரஞ்சன் குடிக் கோட்டையின் அந்த காலத்துக் கண்காணிப்பு கோபுரமாக விளங்கும் கொத்தளத்தின் பக்கசுவர் 3 மீட்டர் அகலம், 2 மீட்டர் உயரத்திற்கு சரிந்து விட்டது. இதனை பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் நேரில்பார்வை யிட்டு ஆய்வுசெய்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளார். அதே போல் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலை வர் சுல்தான்மொய்தீனும் தங்கள் கட்சியின் சார்பாக கலெக்டருக்கும், தொல்லியல் துறைக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அடுத்தடுத்த மழைக்கு கொத்தளம் முழுவதும் சரிந்து கோட்டையின் அடையாளம் அழிந்து போகும் முன்பாக அதனை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.அதேபோல் தொல்லியல் துறையினர் தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, போதுமான நிதி ஒதுக்கி கோட்டையை அதன் பாரம்பரியம் கெடாமல் புதுப்பிக்க வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா ஆர்வலர்கள் தொல்லியல் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்….

The post பெரம்பலூர் பகுதியில் கன மழை எதிரொலி ரஞ்சன்குடி கோட்டை கொத்தள சுவர் சரிந்து விழுந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: