×

மணிகண்டன் ஜோடியாக சான்வே மேகனா

சென்னை: சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்க, ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் முடிந்தது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மணிகண்டன் ஜோடியாக சான்வே மேகனா நடிக்கிறார். மற்றும் குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன், கனகம்மா, ஜென்சன் நடித்துள்ளனர். சுஜித் சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, வைசாக் பாபுராஜ் இசை அமைத்துள்ளார்.

பிரசன்னா பாலசந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி நடித்து, ராஜேஷ்வர் காளிசாமியுடன் இணைந்து கதை எழுதியுள்ளார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் தன்மானத்துக்காகவும், தனது குடும்ப நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களே மையக்கரு. கோவை மார்க்கெட், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

The post மணிகண்டன் ஜோடியாக சான்வே மேகனா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chanve Meghana ,CHENNAI ,Manikandan ,Rajeshwar Kaliswamy ,S. Vinothkumar ,Cinemakaran ,Guru Somasundaram ,R. Sundarrajan ,Kanakamma ,Jensen.… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...