×

இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ செய்தாரா நயன்தாரா?

சென்னை: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டனர். அவ்வப்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களையும், குழந்தைகளுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்களையும் பதிவு செய்து வருவார்.

நயன்தாராவும் அப்படித்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென நயன்தாராவின் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள், அவர் விக்னேஷ் சிவனை அன்பாஃலோ செய்துவிட்டதாகவும் இருவருக்கும் இடையே பிரச்னை என்றும் கூடிய சீக்கிரம் விவாகரத்து செய்ய போவதாகவும் தகவலை கிளப்பிவிட்டனர்.

இதுகுறித்து நயன்தாரா தரப்பினர் கூறியபோது, ‘இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் சிலருடைய ஃபாலோயர்கள் பெயர் காண்பிக்கப்படவில்லை என்றும் தற்போது மீண்டும் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் உள்ளது’ என்றும் கூறியுள்ளனர்.

The post இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ செய்தாரா நயன்தாரா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayanthar ,Vignesh Shivan ,Chennai ,Vignesh Sivan ,Nayanthara ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...