×

16 வயதினிலே டாக்டர் சத்யஜித் டைரக்டர் ஆனார்

பெங்களூரு: விரைவில் கன்னடத்தில் திரைக்கு வரும் படம், ‘புல்லட்’. தர்ம கீர்த்திராஜ் நடித்துள்ள இப்படத்தை சத்யஜித் இயக்கியுள்ளார். இவர், பாரதிராஜா இயக்குனராக அறிமுகமான `16 வயதினிலே’ படத்தில், கால்நடை டாக்டர் வேடத்தில் நடித்தவர். தற்போது ‘புல்லட்’ என்ற படத்தை இயக்கி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதன் தயாரிப்பிலும் இணைந்துள்ளார். இயக்குனரானது குறித்து சத்யஜித் கூறியதாவது:  கடந்த 1976ல் சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவு மற்றும் டைரக்‌ஷன் குறித்து படித்தேன்.

பிறகு நடிப்பு பற்றி படித்து கோல்டு மெடல் வாங்கினேன். போட்டோகிராபர் லட்சுமிகாந்தன் மூலமாக ‘16 வயதினிலே’ பட வாய்ப்பு கிடைத்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோருடன் நடித்தேன். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்த நான், படம் இயக்க வேண்டும் என்ற கனவை 48 வருடங்களாக மனதில் சுமந்திருந்தேன். அதற்கு இப்போதுதான் விடை கிடைத்தது. தர்ம கீர்த்திராஜ் ஹீரோவாக நடித்த ‘புல்லட்’ படத்தின் ஷூட்டிங்கை பெங்களூரு, கோவாவில் நடத்தினேன். இப்படத்தை தமிழ் உள்பட பல மொழிகளில் ரிலீஸ் செய்கிறேன்.

The post 16 வயதினிலே டாக்டர் சத்யஜித் டைரக்டர் ஆனார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dr. ,Satyajith ,Bengaluru ,Dharma Keerthiraj ,Bharathiraja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விட்டு விடுதலையாகுங்கள்…புற்றுநோய்க்குப் பிறகான பராமரிப்பு!