×

ராஜேஷ் எம். இயக்கத்தில் அதர்வா, அதிதி

சென்னை: ராஜேஷ் எம். இயக்கத்தில் அதர்வா, அதிதி ஷங்கர் ஜோடியாக நடிக்க உள்ளனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் பி.ரங்கநாதன் வழங்கும் படத்தை சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் எம். இயக்குகிறார். இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். படம் குறித்து ராஜேஷ் கூறியது: இது எனது படங்களின் பாணியில் பேமிலி என்டர்டெயினர்தான். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதே சமயத்தில் முதல் முறையாக ஒரு கருத்தும் இதில் சொல்கிறேன்.

ஆனால், அது திணிப்பாக இல்லாமல், கதையோடு பயணிக்கும் விதமாக யதார்த்தமாக இருக்கும். காதல், பிரேக்அப், கல்யாணம் என்பதுபோன்ற உறவின் முக்கியத்துவத்தை சொல்லும் படமாகவே இது இருக்கும். தற்போது ஆக்‌ஷன் கேரக்டர்களில் கவனம் செலுத்தி வரும் அதர்வாவுக்கு இந்த படம் வேறொரு களமாக இருக்கும். அதாவது காமெடியிலும் அவர் அசத்தும்படியான படமாக இது அமையும். ஹோம்லியான லுக்கிற்கு அதிதி ஷங்கர் பெயர் போனவர். இந்த கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருப்பார். ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கிறது. அது முடிந்ததும் இந்த படத்தை தொடங்க உள்ளேன். தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.

The post ராஜேஷ் எம். இயக்கத்தில் அதர்வா, அதிதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajesh M. ,Atharva ,Aditi ,Chennai ,Rajesh M. Atharva ,Aditi Shankar ,Rajesh ,P. Ranganathan ,Srivari Films ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அதிதியுடன் திருமணம் எப்போது? சித்தார்த் பதில்