×

பிஜோய் நம்பியாருடன் இணைந்தது ஏன்: அர்ஜுன் தாஸ்

சென்னை: சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் ‘போர்’. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ், இந்தி என இரட்டை மொழிகளில் வரும் மார்ச் 1 முதல் வெளியாகவிருக்கிறது. ‘போர்’ திரைப்படத்தை டீசீரிஸ் மற்றும் ரூக்ஸ் மீடியா இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

இப்படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் அர்ஜுன் தாஸ் பேசியது: இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த பிஜோய் நம்பியார் அவர்களுக்கு என் முதல் நன்றி. சைத்தான் படத்திலிருந்தே பிஜோய் நம்பியாரின் வொர்க் பிடிக்கும். அதனால் அவருடன் பணியாற்றியுள்ளேன். எனக்கு இப்படத்தின் கதையை ஒரு ஓட்டலில் வைத்து தான் கூறினார். அதற்கு முன்னரே காளிதாஸ் படத்தில் புக் ஆகி இருந்தார். படப்பிடிப்பின் போது இயக்குனர் எங்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார்.

பொதுவாக இரு மொழிகளில் ஒரு படத்தின் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு மொழியில் நடிப்பவர்களுக்கு பிற மொழியில் எடுக்கப்பட்ட காட்சிகளைக் காட்டமாட்டார்கள். ஆனால் பிஜோய் எங்களுக்கு அதையும் காட்டிவிட்டு இயல்பாக நடிக்கச் சொன்னார். போர் திரைப்படம் ஒரு கல்லூரி கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் டேக் செல்வதற்கு முன்பு வரை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். ரொம்பவே சேட்டை செய்வான். மற்றபடி மிகச்சிறந்த நண்பன். காளிதாஸ் உடன் சேர்ந்து நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது என்றார்.

The post பிஜோய் நம்பியாருடன் இணைந்தது ஏன்: அர்ஜுன் தாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Bijoy ,Nambiar ,Arjun Das ,CHENNAI ,Kalidas Jayaram ,Bijoy Nambiar ,Saithan ,David ,Washir ,Sholo ,DJ Bhanu ,Sanjana Natarajan ,Mervyn Rosario ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED போர் திரை விமர்சனம்