×

8 மொழி படத்தில் ஜெயசுதா மகன் ஹீரோ

சென்னை: நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடித்துள்ள படம், ‘ரெக்கார்ட் பிரேக்’. வரும் 8ம் தேதி 8 மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்தை ஸ்ரீதிருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் சார்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரித்துள்ளார். புதுமுகம் நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர், சத்யா நடித்துள்ளனர். அம்மா சென்டிமெண்ட் மற்றும் விவசாயிகள் பிரச்னை குறித்தும் பேசப்பட்டுள்ளது.

ரெஸ்லிங்கில் ஹீரோ போட்டி போட்டு எதிர்நாடுகளான சீனா, பாகிஸ்தானை எப்படி ஜெயிக்கிறார் என்பது கதை. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது இயக்குனரும், தயாரிப்பாளருமான சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் பேசுகையில், ‘யாருமே இல்லாத ஹீரோ, சிறுவயதில் இருந்து கிடைக்கும் வேலைகளை கஷ்டப்பட்டு செய்து வருகிறான். அவன் வளர்ந்து ஆளாகி விளையாட்டு ஆர்வத்துடன் செல்லும்போது என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை’ என்றார்.

The post 8 மொழி படத்தில் ஜெயசுதா மகன் ஹீரோ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jayasuda ,Nihar ,Satlavata Srinivas Rao ,Srithirumala Tirupati Venkateswara ,Nagarjuna ,Rakta Iftikhar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பெண் மாவட்ட செயலாளர் என்னை...