×

ஹீரோயினாக நடிக்கும்‘மிஸ் ஆசியா’

சென்னை: ‘மிஸ் ஆசியா’ பட்டம் வென்ற உபாசனா ஆர்.சி ஹீரோயினாக நடிக்கும் படம், ‘ஒரு தவறு செய்தால்’. இதை கே.எம்.பி பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் பாண்டியன் தயாரித்து அரசியல்வாதி வேடத்தில் நடித்துள்ளார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ராம்ஸ், தேனி முருகன், பாரி, சுறா சுரேந்தர், ஸ்ரீதர், சந்தோஷ், தாஸ்மிகா லக்ஷ்மன் ஆகியோர் நடித்துள்ளனர். கவிதை வடிவில் வரும் ஒரு பாடலுக்கு டி.ராஜேந்தர் குரல் கொடுத்துள்ளார்.

நிறைய குறும்படங்களையும், ஓவியா நடித்த ‘மெர்லின்’ என்ற வெப்சீரிஸையும் இயக்கியிருக்கும் மணி தாமோதரன் எழுதி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ஏ.ஆர்.ரெஹானாவிடம் பணிபுரிந்த கே.எம்.ரயான் இசை அமைக்க,விஜய் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை அசோக் நகரிலுள்ள ஒரு வீட்டில் வசிக்கும் 4 இளைஞர்கள், வாடகை கொடுக்க முடியாததால் வீட்டு உரிமையாளர் மூலமாக துரத்தப்படுகின்றனர்.

அதே அசோக் நகரில் சொந்தவீடு கட்டுவோம் என்று சபதம் செய்து கோயம்பேடு செல்லும் அந்த இளைஞர்கள், அங்கு திடீரென்று ஒரு சம்பவத்தில் சிக்குகின்றனர். அது அவர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது, அவர்களால் ஒரு வீடு வாங்க முடிந்ததா என்பதை மையமாக வைத்து
உருவாக்கப்பட்ட இப்படம், டொராண்டோவில் திரைப்பட விழாவில் விருது வென்றது. அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.

The post ஹீரோயினாக நடிக்கும்‘மிஸ் ஆசியா’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Miss Asia ,CHENNAI ,Upasana RC ,KMP Pictures ,Mahesh Pandian ,MS Bhaskar ,Namo Narayanan ,Rams ,Theni Murugan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்