×

5 வருடத்துக்கு பிறகு கோலிவுட்டுக்கு திரும்பினார் ரோஷினி

சென்னை: மைசூர் பெண் ரோஷினி பிரகாஷ். ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு கன்னட படங்களில் நடித்தார். ‘ஏமாலி’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். ‘ஜடா’ என்ற படத்தில் 5 வருடங்களுக்கு முன்பு நடித்தார். தற்போது அவர் பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தில் நடித்துமுடித்துள்ளார். 8 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமானாலும் ரோஷினி நடித்திருப்பது மொத்தம் 10 படங்கள்தான். ‘வணங்கான்’ பாலா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு ரோஷினிக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்.‘வணங்கான்’ படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ‘வணங்கான்’ படத்தின் பர்ஸ்ட் லுட் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் டீசரும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

The post 5 வருடத்துக்கு பிறகு கோலிவுட்டுக்கு திரும்பினார் ரோஷினி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Roshini ,Kollywood ,CHENNAI ,Mysore ,Roshini Prakash ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சீனியர்களுடன் நடிக்கும்போது பதற்றமாக...