×

எலக்சன் பர்ஸ்ட் லுக் வெளியானது

சென்னை: கடந்த 2016ல் ‘உறியடி’, 2019-ல் ‘உறியடி 2’ படத்துக்குப் பின் நடிகர் விஜய்குமார் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இடைவெளிக்குப் பின் அவர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது ‘ஃபைட் க்ளப்’. இந்த படம் சிறந்த மேக்கிங்கால் பாராட்டப்பட்டது. ஆனால் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் விஜய்குமார் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் அறிவிப்பு முதல் தோற்றத்துடன் தற்போது வெளியாகியுள்ளது. ‘எலக்சன்’ என தலைப்பிடப்பட்டுள்ள படத்தை தமிழ் இயக்குகிறார். இவர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான ‘சேத்துமான்’ படத்தை இயக்கியவர். இது அவரது இரண்டாவது படம். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் படத்தை ரீல் குட் பிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

The post எலக்சன் பர்ஸ்ட் லுக் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : ELEKSON ,Chennai ,Vijaykumar ,Elxon ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...